அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது - ஆவேசமான முன்னாள் அமைச்சர்!

sasikala admk jayakumar admkflag
By Irumporai Jul 20, 2021 02:07 PM GMT
Report

அதிமுகவுக்கு சம்பந்தமே இல்லாத சசிகலா அதிமுக கொடியினை எந்த உரிமையில் பயன்படுத்துகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக அவைத் தலைவராக இருந்த  மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் மதுசூதனனைக் காண சேலத்திலிருந்து இன்று காலை புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி நேராக ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனைக்கு வந்த நிலையில் அப்போது சசிகலா திடீரென மருத்துவமனைக்கு வந்தார்.

அதிமுக கொடியை  சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது - ஆவேசமான முன்னாள் அமைச்சர்! | Sasikala The Right To Use The Admk Flag

அப்போது அவரது காரில் அதிமுக கொடி கட்டி வந்தது சர்ச்சையானது இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் போய்ப் பார்க்கலாம் தப்பில்லை.

ஆனால்,  அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சம்பந்தமே இல்லாமல் அதிமுக கொடியைக் கட்டிக்கொண்டு எப்படி காரில் போக முடியும்.

அதிமுக கொடியைக் கட்டிக்கொண்டு செல்ல சசிகலாவுக்கு எந்தவித உரிமையும் இல்லை என ஜெயக்குமார் தெரிவித்தார்.