சசிகலாவுக்கு கோவிலில் ரகசிய பூஜை நடத்திய அமைச்சர்: யார் அவர்?

god hindu pray
By Jon Feb 12, 2021 02:56 PM GMT
Report

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கும்பகோணம் கோவிலில் சசிகலாவுக்காக ரகசிய பூஜை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி பிரத்தியங்கராதேவி கோயிலுக்கு வருகை தந்து 'நிகும்பலா' யாகத்தில் கலந்து கொண்டு அமைச்சர் ரகசிய பூஜை செய்து விட்டு வந்துள்ளார். 

 

இந்த யாகத்தில் கலந்து கொண்டால் எதிரிகளின் தொல்லை விலகும், இழந்ததையும் மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை. எனவே சசிகலாவுக்காக ராஜேந்திர பாலாஜி ரகசிய பூஜை செய்துள்ளார், ஏற்கனவே இந்த கோவிலுக்கு வந்த ஜெயலலிதா, சசிகலா வழிபட்டது குறிப்பிடத்தக்கது.