சசிகலாவுக்காக இந்த பதவி காலியாக இருக்கிறது! வெளியான தகவல்
சசிகலாவுக்காக அமமுக தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று 10 இடங்களில் காணொலியில் நடந்த அமமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில், டிடிவி தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் அதிமுகவை மீட்டெடுப்போம், 7 பேர் விடுதலை மற்றும் பெட்ரோல்- டீசல் விலை உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அமமுக அமைக்கும் அணி தான் முதல் அணி, எங்களுடன் தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து இப்போதைக்கு கூறமுடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகலா சட்டப்போராட்டம் நடத்தி வருவதாக அமமுக தலைவர் பதவி காலியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.