விரைவில் சசிகலாவுடன் இணையும் அதிமுக-வின் முக்கிய பிரபலம்? வெற்றி உறுதியானதாக தகவல்

district Venkatachalam tiruppur
By Jon Feb 16, 2021 03:16 PM GMT
Report

அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளி சசிகலா பக்கம் போகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், அதிமுக அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் திரும்பிய சசிகலா அமைதியாகவே தன்னுடைய வேலைகளை செய்து வருகிறார். அமைதிக்கு பின் புயல் என்பது போல், சசிகலாவின் நடவடிக்கை நிச்சயமாக பேசும் அளவிற்கு இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

விரைவில் சசிகலாவுடன் இணையும் அதிமுக-வின் முக்கிய பிரபலம்? வெற்றி உறுதியானதாக தகவல் | Sasikala Soon Admk Member Join

இந்நிலையில், தற்போது திருப்பூர் மக்களவை தொகுதிக்குள்பட்ட பெருந்துறை தொகுதி எம்எல்ஏவாக கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தெரிவு செய்யப்பட்டவர் தோப்பு கே வெங்கடாசலம். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இவருக்கு பல்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அமைச்சர் பதவிக்காக முயன்றார். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.

அதுமட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, இவர் வேறு கட்சிக்கு தாவ போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரபரத்தன. ஆனால், எம்பி தேர்தலில் கோபிசெட்டிபாளையம், பவானி தொகுதியைவிட, அவருடைய பெருந்துறை தொகுதியில் திமுகவின் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்தது.

விரைவில் சசிகலாவுடன் இணையும் அதிமுக-வின் முக்கிய பிரபலம்? வெற்றி உறுதியானதாக தகவல் | Sasikala Soon Admk Member Join

இதற்கு காரணம், தோப்பு வெங்கடாசலத்தின் கடின உழைப்புதான் எனவும் தொகுதிக்குள் இவர் செய்த நலத்திட்டங்கள், மக்களிடம் பழகும்முறை, உள்ளிட்டவைகளால்தான் பெருந்துறையின் பெரும்பாலான வாக்கு சதவீதத்தை தன்னிடம் தக்க வைத்து கொண்டுள்ளார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தோப்பு வெங்கடாசலம் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதுதான், அதிமுகவில் தற்போது பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.

விரைவில் சசிகலாவுடன் இணையும் அதிமுக-வின் முக்கிய பிரபலம்? வெற்றி உறுதியானதாக தகவல் | Sasikala Soon Admk Member Join

இதற்கு காரணம் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் தரப்போவதில்லை என்று முடிவு செய்திருப்பதாகவும், இதன் காரணமாகவே தோப்பு வெங்கடாசலம் அதிருப்தி அடைந்ததாகவும், கூட்டத்தொடரை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை இது மட்டும் நிச்சயமானால், அவர் சசிகலா பக்கம் செல்ல இருக்கிறாராம். இதனால், அவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க உளவுத்துறைக்கு உத்தரவு பறந்துள்ளது.

அவர் சசிகலா பக்கம் சென்றுவிடுவார் என்பதால், அவருக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், அதிமுகவில் இருந்தாலும் சரி, சசிகலா பக்கம் தாவினாலும் சரி, தொகுதி மக்களின் ஆதரவும், செல்வாக்கும் தோப்புக்கு இருப்பதால், அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.