விடுதலையாகியும் சைலண்டாக சசிகலா! நடக்கப் போவது என்ன?
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிய நிலையில் சசிகலாவின் விடுதலையால் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்றே கருதப்பட்டது. ஆனால் இந்த கணிப்புகளெல்லாம் தற்போது பொய்யாகி போனது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, அனைரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார் சசிகலா.
இந்நிலையில் அதிமுக தலைமையுடன் பேச்சுவாா்த்தை நடைபெறுவதாகவும், அதை அதிமுக தலைமை ஏற்க மறுப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனாலும், அதிமுகவுக்கு தான் பொதுச்செயலாளர் என சசிகலா தொடர்ந்த வழக்கின் விசாரணை முடியாமல் இருப்பதாலும் அமைதி காத்து வருகிறாராம்.
வருகிற 15ம் தேதி விசாரணைக்கு வரக்கூடிய சாதக, பாதகங்களைப் பொருத்தே அவரது அரசியல் பயணம் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் அமமுக-வுக்கு வாக்கு சேகரித்தால், அதிமுக மீது உரிமை கொண்டாட முடியாமல் போகும். 'இரட்டை இலை' அதிமுகவிடம் உள்ள நிலையில், அமமுகவை ஜாதி சாா்புள்ள கட்சியாகத்தான் மக்கள் பாா்க்கிறாா்கள் என்கிற கருத்து பரவலாகவே காணப்படுகிறது.
இதனாலேயே அமமுகாவுக்காகப் பிரசாரம் மேற்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார் சசிகலா.