சசிகலா என்னிடம் வருத்தப்பட்டார்... அன்றைய சந்திப்பில் நடந்தது என்ன? சீமான் பேட்டி

sasikala seeman dmk aiadmk
By Jon Mar 10, 2021 11:51 AM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலாவை சந்தித்து என்ன பேசினேன் என்பது குறித்து முதன் முறையாக பேசியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறை தண்டனை அனுபவித்து தமிழகம் திரும்பிய சசிகலாவை, சரத்குமார், பாரதிராஜா மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர் சந்தித்து பேசினர்.

இதில் சரத்குமாரும், பாரதிராஜாவும் அந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்களே தவிர, சீமான் அதைப் பற்றி எதுவும் கூறாமல் இருந்தார். இந்நிலையில், பிரபல தமிழ் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சீமானிடம் இதைப் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு, அவர் எங்கள் இருவருக்குள் பேசிய விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டியதில்லை. அதன் காரணமாகவே அதை நான் சொல்ல விரும்பவில்லை. எடப்பாடியாருக்கும், சசிகலாவிக்கும் சமரசம் செய்து வைக்க முயன்றார்களா என்ற கேள்விக்கு சீமான், நான் வேண்டும் என்றால் பேசி பார்க்கவா என்று சசிகலாவிடம் கேட்டேன்.

அதற்கு சசிகலா சரி பேசி பாருங்கள் என்றார், ஆனால் நாங்கள் தான் சந்திக்கவேயில்லையே என்று சீமான் பதில் அளித்தார். சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதன் முடிவு குறித்து கேட்ட போது, இதில் எனக்கு விருப்பமில்லை, அவரை மீண்டும் சந்தித்தால் ஏன் இப்படி ஒரு அவசர முடிவை எடுத்தீர்கள் என்று கேட்பேன். சசிகலா விரும்பியது, அனைவரும் ஒன்றாக, அதாவது அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருந்து சேர்ந்து செய்ய வேண்டும், ஜெயலலிதா இத்தனை ஆண்டுகள் காத்து வந்த இந்த அதிமுக, இப்படி பிரிந்து இருப்பது நன்றாக இல்லை என்று வேதனைப்பட்டார்.

நான் அவரிடம் யாராவது ஒரு நடுநிலையான நபரை வைத்து முயற்சி செய்து பார்க்க வேண்டியது தானே என்று சசிகலாவிடம் நான் கேட்டேன், அதற்கு அவர் எதுவும் சரியாக வரவில்லை என்று வருத்தப்பட்டார். அவருக்கு அனைவரும் ஒன்றாக(அதிமுகவில் அனைவரும் ஒன்றாக) இருக்க வேண்டும் என்பது தான் ஆசை, ஆனால் அது தான் நடக்கவில்லையே.

மீண்டும் அவரை(சசிகலாவை) சந்திக்கலாம் என்று நினைத்தேன், ஒரு முறை சந்திப்பிற்கே இத்தனை கேள்விகள், சரி தேர்தல் முடியட்டும் அப்புறம் சென்று பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டதாக சீமான் கூறி முடித்தார்.