சசிகலாவின் உயிருக்கு ஆபத்து: உடனே பாதுகாப்பு வழங்குங்கள்
வருகிற 8ம் தேதி தமிழகம் வரும் சசிகலாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென வைகை சாந்தகுமார் என்பவர் மனு அளித்துள்ளார். தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர், பலரும் வாழ்த்துக்கள் கூறி போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு ஒன்றிய அதிமுக அம்மா பேரவை அவைத்தலைவர் பதவி வகிக்கும் வைகை சாந்தகுமார் என்பவர் காடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலாவின் வருகைக்கு ஆதரவு தெரிவித்து தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டினார்.
மேலும் வைகை சாந்தகுமார் சசிகலா உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல் துறை தலைவருக்கு தபால் மூலம் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், வரும் 8 ஆம் தேதி தமிழகம் வரும் சசிகலாவிற்கு எதிரிகள் பலர் உள்ளனர்.
இதனால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் எனவே சசிக்கலாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.