அண்ணாமலை அரசியல் அனுபவமில்லாத குழந்தை; இதை மக்களும் ரசிக்கல - சாடிய சசிகலா!

V. K. Sasikala K. Annamalai
By Sumathi Jun 14, 2023 04:26 AM GMT
Report

அரசியல் அனுபவமில்லாத குழந்தை அண்ணாமலை என சசிகலா தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கருத்து

ஊழல் விவகாரத்தில் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தால் அதிமுக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து, கண்டனம் தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை அரசியல் அனுபவமில்லாத குழந்தை; இதை மக்களும் ரசிக்கல - சாடிய சசிகலா! | Sasikala Says About Annamalai Admk Issues

அதில், ``ஜெயலலிதாவின் சாதனைகள் பற்றியெல்லாம் எதுவும் அறியாத அரசியல் அனுவமில்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டியதில்லை.

சசிகலா சாடல்

அண்ணாமலையின் பேச்சை தமிழ்நாட்டு மக்கள் ரசிக்கவில்லை. தி.மு.க-வினர் புனைந்த பொய்யான வழக்குகளையெல்லாம் முறியடித்து, மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் ஜெயலலிதா, எனவே, பொறுப்பற்றவர்களின் பேச்சுகளைப் புறந்தள்ளுவோம்.

இதுபோன்ற கருத்துகளால் தி.மு.க.வினர் வேண்டுமென்றால் மகிழ்ச்சியடையலாம். மக்கள் அளித்த தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்பதை மனதில் வைத்து மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவோம். ஒருங்கிணைந்த அ.தி.மு.க. உருவாக்கி தமிழக மக்களை காத்திடுவோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.