’சசிகலா அதிருப்தி’ எடப்பாடி தொகுதியிலே முதல்வரை தோற்கடிக்க திட்டம் தயார்.!

sasikala edappadi ready
By Jon Mar 05, 2021 01:48 PM GMT
Report

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்று தான் அறிக்கை விட்டிருக்கிறார், விலகப் போகிறேன் என்று சொல்லவில்லை. எனவே சசிகலாவின் ஓய்வு தற்காலிகமானது தான் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகம் திரும்பிய சசிகலா அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

அதற்கேற்றார் போலவே சசிகலாவின் நகர்வுகளும் இருந்தன. அதிமுக கொடியுடன் பயணித்தது, அதிமுக பொதுச் செயலாளர் என அறிக்கை வெளியிட்டது, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்தியது என அமைதியாக காய்களை நகர்த்தினார் சசிகலா.

நிச்சயமாக அரசியலில் ஈடுபவேன் எனக்கூறி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என சசிகலா தெரிவிக்க காரணம் என்னவென்பது பலரும் விளங்கவில்லை.

இது தொடர்பாக சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசிக் கொண்டதாவது, “1989-ல் ஜெயலலிதாவும் இதே போல அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று சொன்னார். ஆனால் விலகினாரா, கடைசி வரை முதல்வராக தானே இருந்தார். அதே போல தான் சசிகலாவின் இந்த அறிக்கையும்.

தற்காலிகமாக தான் அவர் ஒதுங்கியிருக்கிறார். தன்னால் அதிமுக தோற்றுவிட்டதாகவோ அல்லது கட்சியில் பிளவு ஏற்பட்டு விட்டதாகவோ தொண்டர்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே சசிகலா ஒதுங்கி இருக்கிறார். முதல்வர் எடப்பாடி மீதும் சசிகலா கடும அதிருப்தியில் இருக்கிறார். இதனால் எடப்பாடி தொகுதியிலும் முதல்வரை தோற்கடிப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

தினகரனுக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிகக் அவர் தயாராக இல்லை. அதனால் அவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே சசிகலா அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி முடிவெடுப்பார்” என்றனர்.