வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால், நாக்கு இருக்காது - அமைச்சருக்கு சசிகலா புஷ்பா மிரட்டல்

Tamil nadu DMK BJP
By Thahir Dec 22, 2022 06:20 AM GMT
Report

வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால், நாக்கு இருக்காது என அமைச்சர் கீதா ஜீவனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 

துாத்துக்குடியில், பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன்.பால கணபதி ஆகியோர கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Sasikala Pushpa threatens Minister Geeta Jeevan

இந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகலா புஷ்பா, தலைவர் அண்ணாமலை 24 மணி நேரமும் உழைத்து கொண்டிருக்கும், மக்களுக்காக உழைக்கும் அவரை பறறி பேச தகுதி இல்லை.

மரியாதையாக பேச சொல்லி கொடுத்த பண்பு பாஜக, ஒருமையில் பேசும் பழக்கம் பாஜகவிற்கு இல்லை என்றார்.

அமைச்சருக்கு மிரட்டல் 

அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என பொது கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியிருந்தார்.

Sasikala Pushpa threatens Minister Geeta Jeevan

அதற்கு பதிலடி அளிக்கும் வகையில், ஆவேசமாக பேசிய சசிகலா புஷ்பா, நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு இருக்காது என்றார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சருக்கு சசிகலா புஷ்பா மிரட்டல் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.