‘‘படுக்கை அறையில் அரைகுறை ஆடை , சசிகலா புஷ்பா வீட்டில் படுத்திருந்த மர்ம நபர்’’ - சிக்கிய வீடியோ ஆதாரம்?
முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் ஆண் ஒருவர் படுத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக சசிகலா புஷ்பாவின் இரண்டாவது கணவர் ராமசாமி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி, மேயர் சசிகலா புஷ்பா தற்போது பாஜகவில் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது கணவனை பிரிந்து இரண்டாவதாக ராமசாமி என்ற வழக்கறிஞரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சட்டப்படி தனது முதல் கணவரை பிரியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சசிலாபுஷ்பாவிற்கும் ராமசாமிக்கும் கடந்த சில நாட்களாக சண்டை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சசிகலா புஷ்பா ராமசாமி இருவரும் அண்ணா நகரில் இருக்கும் ராமசாமிக்கு சொந்தமான வீடு ஒன்றில் வசித்து வந்த நிலையில், சசிகலா புஷ்பாவை பார்க்க சில ஆண்கள் அவ்வப்போது வந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் சசிகலா புஷ்பா ராமசாமிக்கு இருவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக சண்டை உச்சத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான், கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலா புஷ்பா தனது வீட்டில் போதையில் படுத்து கிடந்ததாக ராமசாமி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
அதோடு வீடு முழுக்க பல இடங்களில் மது பாட்டில் கிடந்ததாகவும், இன்னொரு அறையில் பெண் ஒருவர் போதையில் இருந்ததாகவும், இன்னொரு ஆண் அரைகுறை ஆடையுடன் கிடந்ததாகவும் ராமசாமி புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது .
சென்னை போலீசிடம் புகார் அளித்துள்ள ராமசாமி, தனது வீட்டை வைத்து சசிகலா புஷ்பா பாலியல் தொழில் செய்து வருவதாகவும் . வீட்டிற்கு ஆண்கள் பலர் வந்து செல்கின்றனர் வீடு முழுக்க மது பாட்டில்கள், ஆணுறைகள் கிடந்ததால் இது குறித்து சசிகலா புஷ்பாவிடம் கேட்டபோது சசிகலா புஷ்பா கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக ராமசாமி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து சசிகலா புஷ்பா மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் அந்த வீட்டில் இருந்த அமுதா என்று பெண்ணுக்கு எதிராகவும், வீட்டில் படுத்திருந்த ஆண் தஞ்சாவூர் ராஜா என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இவர்தான் வீட்டில் அரைகுறை ஆடையுடன் படுத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னிடம் இதை பற்றிய வீடியோ ஒன்று இருப்பதாகவும் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சசிகலா புஷ்பா என்னை தாக்கி வீடியோவை டெலிட் செய்துவிட்டதாகவும் போனில் இருக்கும் வீடியோ ஆதாரத்தை போலீசார் மீட்க வேண்டும்என்று ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.