சசிகலா புஷ்பாவிடம் பாஜக நிர்வாகி பாலியல் சீண்டல் - கணவர் போலீசில் புகார்

Tamil nadu BJP
By Thahir 2 மாதங்கள் முன்

தனது மனைவி சசிகலா புஷ்பாவிடம் பாஜக நிர்வாகி பாலகணபதி பாலியல் சீண்டலில் ஈடுபடும் வகையில் நடந்து கொண்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவர் காவல் கண்காணிப்பாளரிடம் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார்.

கணவர் காவல்துறையினரிடம் புகார் 

கடந்த 15ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் பாஜக சார்பில் மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் முன்னாள் எம்பியும், பாஜக நிர்வாகியுமான சசகிலா புஷ்பா கலந்து கொண்டார்.

சசிகலா புஷ்பாவிடம் பாஜக நிர்வாகி பாலியல் சீண்டல் - கணவர் போலீசில் புகார் | Sasikala Pushpa Bjp Executive Sexually Harassment

நிகழ்ச்சியின் போது சசிகலா புஷ்பாவின் அருகில் இருந்த பாஜக நிர்வாகி பாலகணபதி பாலியல் சீண்டலில் ஈடுபடும் வகையில் நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொன்.பாலகணபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி துாத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.