சசிகலா புஷ்பாவிற்கு பாஜக நிர்வாகி பாலியல் சீண்டல்? - வெளியான அதிர்ச்சி வீடியோ
சசிகலா புஷ்பாவிடம் பாஜக நிர்வாகி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் சீண்டலா?
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் முன்னாள் எம்பியும், பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டார்.
அப்போது பாஜக மூத்த நிர்வாகி பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி இருந்து வருகிறார். அவர் தான் சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ பதிவில், கூட்ட நெரிசலில் நிற்கும் சசிகலா புஷ்பா எரிச்சலோடு நின்ற நிலையில் அவருடைய சேலை பின்னால் நின்ற பாலகணபதி அருகே மாட்டிக் கொண்டது.
அதை எடுக்க பாலகணபதி உதவுகிறார். மேலும் அவர் மலர் வளையம் வைக்கும் போது சசிகலாவின் கையை அவர் பிடிக்க முயற்சிப்பது போல தோற்றமளிக்கிறது.
பின்னர் இருவரும் பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கம் எழுப்புகின்றனர்.இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகும் நிலையில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
#Sasikalapushpa #BJP இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் சசிகலா புஷ்பா #Balaganapthy pic.twitter.com/4fmgDdhfs6
— Neelamegam S (@NeelamegamS3) September 13, 2022