மீண்டும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

dmk perarivalan dhinakaran
By Jon Feb 09, 2021 12:00 PM GMT
Report

சசிகலாவை ஆதரித்து அதிமுகவினர் தொடர்ந்து போஸ்டர் ஒட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலம் முடிந்து சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

அவரது அடுத்த நடவடிக்கைகள் என்ன? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க.வினர் சார்பில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அவ்வாறு போஸ்டர் ஒட்டும் அ.தி.மு.க.வினரை நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க.வினர் சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. அதில், சோதனைகளை வென்று சாதனை படைக்க தமிழகத்துக்கு வருகை தரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை வரவேற்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.