சசிகலா விரைவில் அரசியல் பேசுவார்: வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல்
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார். தற்போது பெங்களூரில் ஓய்வு எடுத்து வரும் அவர் வரும் 8 ஆம் தேதி சென்னை வருகிறார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.
நேற்று இளவரசி விடுதலை ஆன நிலையில் இதற்காக பெங்களூரு சிறைக்கு சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சென்று இருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, ”சசிகலா காரில் அதிமுக கட்சி கொடியை கட்டி சென்றதும், அவர் அதிமுக கொடியை பயன்படுத்தியதும் தவறு இல்லை.
சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியதால் என்ன சர்ச்சை உருவானது? சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியதை பதற்றமாக எடுத்து கொள்ளாமல் அதிமுகவினர் அதை பிரபலமாக எடுத்து கொள்ள வேண்டும். அரசியல் ரீதியான கருத்துகளுக்கு விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து சசிகலா விளக்கம் அளிக்க உள்ளார்.
அவர் விரைவில் மக்களையும் சந்திக்கவும் உள்ளார்” என்றார்.