சசிகலா அரசியல் பயணத்தில் எந்த தடையும் கிடையாது - விரைவில் பிரச்சாரம் மேற்கொள்வார் - நமது எம்ஜிஆர் நாளேடு தகவல்

india election tamilnadu dmk
By Jon Mar 03, 2021 12:45 PM GMT
Report

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகள் தற்போது தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சசிகலா பிரச்சாரம் செய்ய உள்ளதாக நமது எம்ஜிஆர் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து எம்.ஜி.ஆர். நாளேட்டில் கூறியிருப்பதாவது - சசிகலா ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார். அவரது அரசியல் பயணத்தில் எந்த தடையும் கிடையாது. சசிகலா எழுச்சியை நசுக்க நச்சு கும்பல் ஒன்று சதிவலைகளை பின்னி உள்ளது. ஆனால் அதனை கண்டு அஞ்சமாட்டார்கள்.

சசிகலா தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்க வேண்டும் என நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்துகிறார் என்று நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் எழுதி உள்ளது. இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே எழுதிக்கொண்டிருப்பார்கள்? தொகுதி பங்கீடே அதிமுக செய்ய தொடங்கி இருக்கிறது.


Gallery