சசிகலா செய்த தியாகங்கள் எத்தனை? : பொதுமக்கள் ஒருவரின் கருத்து
சசிகலா அவர்களின் தியாகங்கள் எத்தனை என என்ற பெயரில் பொதுமக்களில் ஒருவர் கிண்டலடித்து எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. சசிகலா அவர்களின் விடுதலைக் குறித்து பொதுமக்களில் ஒருவர் தனது கருத்தை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது, திருநின்றவூர், திருவள்ளுர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:'தவ வாழ்க்கை வாழ்ந்தவர், சசிகலா'என, முன்னாள் அ.தி.மு.க.,அமைச்சர் கோகுல இந்திரா கூறியுள்ளார்.
உண்மை தான்! சாதாரண கேசட் கடை நடத்தி வந்த சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெ.,வின் நட்பை பெற செய்த தவம் மகத்தானது. ஜெ.,வின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்று, அவரின் வீட்டிற்குள் நுழைய சசிகலா செய்த தவம் கொஞ்சமா, நஞ்சமா?
ஜெ., ஆட்சியில் இருந்த காலங்களில் தனக்காகவும், குடும்ப உறவினருக்காகவும் தியாக உணர்வுடன், சசிகலா சொத்து வாங்கி வித்தாரே. .. அதை எவ்விதம் போற்றுவது?. மேலும் மருத்துவமனையில், 75 நாட்களாக, ஜெ.,வை , யாரும் அண்ட விடாமல் கவனித்துக் கொண்டது, எப்பேர்ப்பட்ட தியாகம்? ஜெ., மறைந்தவுடன்,'அ.தி.மு.க.,வை காப்பாற்ற வேண்டும்' என்ற தியாகஉணர்வுடன், உடனே பொதுச் செயலராகி,முதல்வர் பதவிக்கு அடிபோட்டது சாதாரண தியாகமா? அவர் செய்த தியாகத்தால் தான், சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர், தன் தியாகசெயலை தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படித்தான், கோகுல இந்திரா உள்ளிட்ட சிலர் கூறுவர்.அவர்களை பொறுத்தவரையில் திருப்பூர் குமரன்,வாஞ் சிநாதன்,காமராஜர் வ.உ.சி., போன்றோர் எல்லாம், தியாகிகள்அல்ல ; சொத்து குவிப்பு வழக்கு குற்றவாளி தான், தியாகி!