விரைவில் மக்களை நேரில் சந்திப்பேன் - சசிகலா
விரைவில் மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் என சசிகலா அவர்கள் தெரிவித்துள்ளார். சசிகலா அவர்கள் உடனிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் அவர் கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆகி தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் 1000-க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க ஊர்வலமாக சென்னைக்கு அவரை அழைத்து வர சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர். அவர் செல்லும் வழியில் சசிகலாவின் 66 வயதை குறிக்கும் விதமாக 66 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மேலும் சென்னை செல்லும் வழியில் உள்ள முக்கிய கோவில்களில் வழிபாடு நடத்தவும் கட்சியினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இது சம்பந்தமாக சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:- சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் கையெழுத்து வாங்கி முறைப்படி விடுவித்து இருக்கிறார்கள்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதால் அது சம்பந்தமான அனைத்து நடைமுறைகளையும் அவர் பின்பற்றுகிறார்.
சசிகலா என்னிடம் ஒரு தகவலை தெரிவித்தார். விரைவில் தமிழக மக்களை சந்திப்பேன் என்று அவர் கூறினார். இந்த தகவலை மக்களிடம் சொல்லும்படியும் தெரிவித்தார்.
இவ்வாறு செந்தூர் பாண்டியன் கூறினார்.