சசிகலாவை மக்கள் ஜெயலலிதாவின் மறு உருவமாக பார்க்கிறார்கள் - கருனாஸ் அதிரடி
சசிகலாவின் வருகை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சொல்லப்பட்டு வந்தாலும் பலரும் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சசிகலா தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி எதுவும் அறிவிக்கவில்லை. நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன், விரைவில் உங்களை சந்திப்பேன் என்று மட்டும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த திருவாடானையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ”சசிகலா வருகையின்போது அதிமுக தொண்டர்கள் மட்டுமன்றி ஏராளமான பொதுமக்கள் அவரை வரவேற்றார்கள் என தெரிவித்தார். யாரும் எதிர்பார்க்காத அளவிலே சாதி, மதம் கடந்து அதிமுக தொண்டர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் அனைவரும் அரவரதத்துடன் வரவேற்றனர்.
30 ஆண்டுகளுக்கு மேலாகவே ஜெயலலிதா உடன் பயணித்தது மட்டமல்லாமல், அரசியல் துறையில் அவரின் நிழலாக இருந்தார்.
அதிமுக தொண்டர்கள் அவரை நேசிக்கிறார்கள். அவரை ஜெயலலிதாவிற்கு பின்னர் அரசியல் ரீதியாக ஒரு ஆளுமை மிக்க தலைவராக இருந்த ஜெயலலிதாவின் நிழலாக, ஜெயலலிதாவின் மறு உருவமாக பொது மக்கள் பார்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.