சசிகலா 3-ம் நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயற்கையாக சுவாசிக்கிறார் - அரசு மருத்துவமனை தகவல்
கடந்த 20ம் தேதி ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சிறைத்துறை, சசிகலாவை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு அவருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கிய நிலையில், சிறையில் இருந்து அவர் விடுதலையானாலும், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. சசிகலா 3-ம் நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயற்கையாக சுவாசித்து வருகிறார் என்று அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்திருக்கிறது.
இவர் எந்த உபகரணமின்றி இயற்கையாக 3 நாள் சுவாசித்தால் சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை கூறியுள்ளது.