சசிகலாவிற்கு ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை தொடரப்பட்டு வருகிறது
சசிகலா அவர்களுக்கு சிறையிலும் தொடர்ந்து ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சசிகலா வருகிற ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆகவுள்ள நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதனையடுத்து அவருக்கு கொரோனா நெகட்டிவ் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இன்று அவருக்கு திடீரென உடல் நிலை குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் பெங்களூரு போரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் சசிகலா காய்ச்சல் இருமல், தைராய்டு, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தற்போது ஆக்ஸிஜன் அளவு 79 சதவீதம் ஆக இருப்பதால் தொடர்ந்து அவருக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.