சசிகலாவுக்கு வாழ்த்து சொன்னது ஏன்? ஓபிஎஸ் மகன் மீண்டும் விளக்கம்
சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். இவரது விடுதலையை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ஜெயபிரதீப் வெளியிட்டிருந்த அறிக்கையில், பெங்களூருவில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய அம்மையார் திருமதி. சசிகலா நடராஜன் அவர்கள் பூரண குணமடைந்து இனி வரும் காலங்களில் நல்ல உடல் நலம் பெற்று அறம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு என தனது அறிக்கையில் தெரிவித்தார்.
இதனால் சற்று சலசலப்பு நிலவவே, மீண்டும் விளக்கம் அளித்துள்ள ஜெயபிரதீப், மனிதாபிமான அடிப்படையில் தான் சசிகலாவிற்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறியுள்ளார்.