சசிகலா விடுதலையாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
india
jail
tamilnadu
By Jon
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிற சூழ்நிலையில அரசியல் அரங்கம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எந்நேரமும் விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவின் விடுதலை அதிமுகவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பலரும் அனுமானித்து வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டியளித்துள்ளார்.
மேலும் சசிகலா விடுதலை ஆகலாம் என்று கணிக்கப்பட்டுள்ள ஜனவரி 27-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக கட்டப்பட்டுள்ள நினைவிடத்தையும் திறந்து வைக்க இருக்கிறார்.