தேர்தல் முடிவுகளில் கவனம் செலுத்தும் சசிகலா

sasikala
By Fathima May 02, 2021 05:50 AM GMT
Report

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்தது.

இன்று காலை 8 மணிமுதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் கூட கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர், இதனால் தொண்டர்கள் பேரதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

தனித்து போட்டியிட்டு அமமுக ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்க முடியவில்லை, முதன் முறையாக போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், குஷ்பு-வும் பின்னடையை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் சசிகலா தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் ஆர்வமாக கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.