எடப்பாடி பழனிசாமியை மீண்டும் சீண்டிய சசிகலா..
அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என ஒரு பொறுப்பே இல்லை என்று சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா தொண்டர்களிடம் பேசும் ஆடியோ வெளியாகி வருகிறது.

அந்த வகையில் பூண்டியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவருடன் சசிகலா பேசும் ஆடியோவில், எதிர்காலத்தில் கட்சிக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தொண்டர்கள் தான் தலைமையை முடிவு செய்ய வேண்டும் என்ற விதியை எம்ஜிஆர் கொண்டு வந்தார் எனக் கூறுகிறார். எம்ஜிஆர் கொண்டு வந்த விதியை யாராலும் மாற்ற முடியாது என்றும் அவர் பேசியுள்ளார்.
மேலும் அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என ஒரு பொறுப்பே இல்லை என்று கூறி அவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சீண்டும் வகையில் பேசியுள்ளார்.