இபிஸ்.. ஓபிஸ்ஸை அரவணைத்து செல்ல விரும்புகிறேன் : சசிகலாவின் அடுத்த ஆடியோ வெளியீடு
எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறேன் என தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு அறிவித்த சசிகலா கடந்த சில வாரங்களாக தனது ஆதரவாளர்களிடம் பேசும் ஆடியோ வெளியாகி அதிமுகவினரிடையும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சங்கரன்கோவிலை சேர்ந்த கலைச்செல்வனுடன் அவர் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.
அதில் எடப்பாடி பழனிசாமியையும், ஓ. பன்னீர்செல்வத்தையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
மேலும் தொண்டர்களின் விருப்பப்படி கட்சியை வழிநடத்துவேன். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காட்டிய வழியில் செல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.