விரைவில் அதிமுகவுக்கு தலைமையேற்பேன் - சசிகலா அதிரடி

Sasikala
By Petchi Avudaiappan Jul 13, 2021 12:04 PM GMT
Report

அதிமுக பொதுச் செயலாளராக நான் நிச்சயம் தலைமை ஏற்பேன் என சசிகலா பேசிய புதிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்க அறிவித்த சசிகலா கடந்த சில வாரங்களாக தொண்டர்களிடையே பேசும் ஆடியோ வெளியாகி அதிமுகவினர் இடையேபெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சசிகலா உடன் பேசிய தொண்டர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட போதும் தொடர்ந்து ஆடியோ வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. 

அந்த வகையில் தற்போது புதிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சிவகங்கை சண்முகநாதன் என்பவருடன் அவர் பேசியுள்ள ஆடியோவில் தொண்டர்கள் என்னை பொதுச் செயலாளர்னு சொல்லிட்டீங்க. நான் நிச்சயம் வந்து தலைமை ஏற்பேன். கவலைப்படாதீங்க என தெரிவித்துள்ளார்.