"கண்டிப்பா திரும்பி வருவேன்" - சசிகலாவின் அடுத்த ஆடியோ வெளியீடு
மயிலாடுதுறையைச் சேர்ந்த அதிமுக பெண் நிர்வாகியிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா கடந்த சில வாரங்களாக தொண்டர்களிடம் பேசும் ஆடியோ அடுத்தடுத்து வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் அதிமுக மகளிர் அணியின் மயிலாடுதுறை மாவட்ட இணைச் செயலாளர் சுமதியுடன் சசிகலா செல்போனில் பேசியுள்ளார். அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கட்சியாக மாறிவிட்டது என மயிலாடுதுறை மாவட்ட இணைச் செயலாளர் சுமதி, சசிகலாவிடம் வருத்தம் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த சசிகலா, தாம் கட்டாயம் திரும்பி வர இருப்பதாகவும், எம்ஜிஆர் கூறியதைப்போல தொண்டர்கள் மூலம் அதிமுகவின் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் சமாதானம் கூறுகிறார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.