புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா!

V. K. Sasikala
By Fathima Feb 15, 2026 09:50 AM GMT
Report

 மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி புதிய கட்சியை சசிகலா தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக-வில் இணைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில், புதிய கட்சியை தொடங்கி அரசியல் களம் காண்கிறார் சசிகலா.

தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆதரவு அதிகம் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா! | Sasikala New Party

கடந்த 10 நாட்களாக நிர்வாகிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம்.

இதற்கிடையே அமமுக டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருவதும் புதிய கட்சி தொடங்க ஒரு காரணம் என கூறப்படுகிறது.

24ம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் கூட்டத்தில் புதிய கட்சி மற்றும் கொடியை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா! | Sasikala New Party