ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே.. புது பங்களா - கிரகப்பிரவேசம் நடத்திய சசிகலா!
சசிகலா கட்டிய புதிய இல்லத்தின் கிரகப்பிரவேச நிகழ்வு நடைபெற்றுள்ளது.
சசிகலா
ஜெயலலிதாவின் வேதா இல்லம், நீதிமன்ற உத்தரவுப்படி அவரது அண்ணன் குடும்பத்தினராகிய தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சசிகலா சென்னை தியாகராயர் நகரில் உள்ள அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில்தான் வசித்து வந்தார்.
அதே நேரம், போயஸ் கார்டனில் வேதா இல்லத்துக்கு எதிரே சசிகலாவின் புதிய பங்களா கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தற்போது அந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து இன்று காலை கிரகப்பிரவேசம் நடைபெற்றது.
கிரகப்பிரவேச நிகழ்வு
இதில் சசிகலாவின் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். முன்னதாக அருகே உள்ள விநாயகர் கோவிலில் சசிகலா வழிபாடு நடத்தினார். முன்னதாக சசிகலா தொடர்பான ரூ1,520 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்த அமலாக்கத்துறை, விதித்த அபராத தொகை ரூ480 கோடி.
அதனை அவர் கட்டிய நிலையில் இதுவரை முடக்கப்பட்ட அத்தனை சொத்துகளும் விடுவிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இனி சசிகலா தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த வீட்டின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.