அதிமுக - அமமுக இணைய வேண்டும்: சசிகலாவின் அடுத்த ஆடியோ வெளியீடு
அதிமுக,அமமுக தொண்டர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்று தனது ஆதரவாளர்களிடம் சசிகலா பேசும் அடுத்த ஆடியோ வெளியாகி உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு அறிவித்த சசிகலா கடந்த சில வாரங்களாக தனது ஆதரவாளர்களிடம் பேசும் ஆடியோ வெளியாகி அதிமுகவினரிடையும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் விழுப்புரத்தைச் சேர்ந்த கோமதி சீனிவாசன் என்பவருடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் அவரிடம், நீங்கள் வந்து தான் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றும், நீங்கள் விலகுவதாக அறிவித்தது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்றும் கோமதி கூறுகிறார்.
அதற்கு சசிகலா, அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் கூறினேன். அதை அவர்கள் கேட்கவில்லையெனில் நான் என்ன செய்ய முடியும்?. ஒதுங்கிருந்தால் அம்மா ஆட்சியை கொண்டு வருவார்கள் என்று நினைத்தேன் தற்போது தொண்டர்களை நான் காப்பாற்ற வேண்டும் என்பதால் தான் நான் மீண்டும் வருகிறேன்.
நிச்சயம் அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக, அமமுக தொண்டர்கள்
அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் தான்.அதில் மாற்று கருத்தே கிடையாது.
இப்போ வந்தவர்கள் அனைவரும் வெறும் பதவிக்காக தான் இங்கு இருக்கிறார்கள் என்றும் சசிகலா அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.