வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லை: உறவினர்கள் அதிர்ச்சி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. நாளை பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் விடுதலையான சசிகலா இந்தத் தேர்தலில் முக்கியமான பங்களிப்பு செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சசிகலா தெரிவித்துவிட்டார். தீய திமுகவை வீழ்த்துவதே நோக்கம் என்றும் தெரிவித்திருந்தார்.

தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என சொல்லப்பட்டு வந்தது. தற்போது சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் வேண்டும் என்றே சசிகலா பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்த் நீக்கிவிட்டனர் என அவருடைய உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.