தொடங்கியது சசிகலாவின் ஆட்டம் - பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் கல்வெட்டு: அரசியலில் கிளம்பிய அடுத்த சர்ச்சை
சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுகவின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு வி.கே.சசிகலா என்ற பெயரில் கல்வெட்டு பதிக்கபப்ட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்ததையொட்டி இன்ரு பொன்விழா கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் அதிமுகவின் பொன் விழா ஆண்டையொட்டி அதிமுகவினர் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சசிகலா கொடியேற்ற உள்ளார்.
இதன் காரணமாக அங்கு சசிகலாவிற்கு வரவேற்பு பலகைகள் குவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்த இடத்தில் உள்ள ஒரு கல்வெட்டில், கொடியேற்றியவர் அதிமுக கழக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா என்று பதிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவினர் சசிகலாவை ஏற்காத நிலையில், இந்த கல்வெட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.