‘தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்...’ - சசிகலா பரபரப்பு பேட்டி
சிறைத்தண்டனை முடித்து விடுதலையான சசிகலா சென்னை வந்து அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அரசியலை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கட்சியின் முழு பலத்தையும் கையிலெடுத்த ஈபிஎஸ்- ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்த முடிவு செல்லாது என தீர்மானம் நிறைவேற்றினர்.
அதிமுகவின் இந்த நகர்வு சசிகலாவின் தலையில் பேரிடியாக விழுந்தது. சசிகலா தனது பொதுச் செயலாளர் பதவியை மீட்டெடுக்க சட்டப் போராட்டத்தை தொடர்ந்தார்.
அரசியலிலிருந்து தன்னை விலக்கிக் கொண்ட பிறகும், இந்த வழக்கில் பின்வாங்க அவர் விரும்பவில்லை.
இந்நிலையில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அதிமுகவில் பரபரப்பு, சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, சசிகலா நாமக்கலில் உள்ள ஆஞ்சநேயர் கோயிவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அப்போது, அவரிடம் செய்தியாளர்கள் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, சசிகலா இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று கூறினார்.

விடுதலைப்புலிகள் தலைவர் மரணத்தில் தொடரும் மர்ம புதிர்: மீண்டும் குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்கள் IBC Tamil

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
