சசிகலாவை பற்றி அமைச்சர்கள் வாய் திறக்காதது ஏன்?
சசிகலாவை பற்றி பேச அமைச்சர்கள் தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ. கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவிற்கும் அவங்களுக்கும் (சசிகலாவிற்கும்) சம்பந்தம் இல்லை, அவங்க ஒரு கட்சி ஆரம்பித்து விட்டனர். அதிமுக யாரூக்கும் அஞ்சாது, பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
தேவையில்லாதவர்களை பற்றி, தேவையில்லமால் பேசு வேண்டிய தேவையில்லை என்பதால் யாரூம் பேசுவதில்லை என தெரிவித்தார். மேலும் அதிமுகவை மீட்கவே அமமுக தொடங்கப்பட்டுள்ளது என்று டிடிவி தினகரன் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, ஒரு கட்சியை தொடங்குவதற்கு காரணம் சொல்ல வேண்டும், அதை தான் டிடிவி தினகரன் சொல்கிறார்.
கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தற்கு ஒரு காரணம் சொல்கிறார். இப்படி ஒவ்வொருவரும் கட்சி ஆரம்பித்தற்கு ஏதவாது காரணத்தினை கண்டிடுப்பிடிப்பார்கள் அப்படி ஒரு காரணத்தினை டி.டிவி கண்டுபிடித்துள்ளார். எந்த காலமும் எதையும் யார் கைப்பற்ற போவதில்லை என்றார்.