நள்ளிரவில் சிறப்பு பூஜை செய்த சசிகலா? புரோகிதர்கள் சொன்ன முக்கிய தகவல்
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பி கொண்டிருக்கிறார். இதனையடுத்து அதிமுக அலுவலகம், ஜெயலலிதா நினைவிடம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலை நெடுகிலும் அமமுக நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்க பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சசிகலா சிறப்பு வேல் பூஜை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக திருப்பதியில் இருந்து 2 புரோகிதர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது, மேலும் அவர்கள் காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் தனியார் விடுதியில் இருந்து புறப்பட வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
இதன்படி அவர் 7.50 மணியளவில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார், இதற்கு முன்னதாக பெண்கள் ஆர்த்தி எடுத்து சசிகலாவை அனுப்பி வைத்தாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.