சசிகலா விலகியது ஏன் தெரியுமா? குடும்பத்தினர் சொன்ன அதிமுக்கிய தகவல்

family politics sasikala
By Jon Mar 04, 2021 01:05 PM GMT
Report

அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது விலகலுக்கு ஆயிரமாயிரம் காரணங்கள் சொல்லப்படுகிறது, சசிகலாவின் முடிவை தடுக்க தான் எவ்வளவோ முயற்சித்ததாகவும், ஆனால் தன்னால் 30 நிமிடங்கள் மட்டுமே அறிக்கையை தள்ளிப்போட வைக்க முடிந்ததாகவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

அறிக்கையில், தொண்டர் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றும், நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபடவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

“ இந்நிலையில் சசிகலாவுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் The Indian Express தெரிவித்துள்ள தகவலில், சசிகலா அவர்கள் அம்மா ஜெயலலிதாவுடன் மூன்று தசாப்தங்களாக வாழ்ந்துள்ளார். தற்போது அவரும் உயிருடன் இல்லை, சிறைத்தண்டனையையும் சசிகலா அனுபவித்து விட்டார், அவரது கணவரும் உயிருடன் இல்லை.

சசிகலாவுக்கு குழந்தைகளும் இல்லை, இந்த வயதில் அவர்களை கவனிக்க யாரும் இல்லை. தற்போதைய சூழலில் கட்சியை காப்பாற்ற வேண்டுமென்றால், அதற்காக அவர் போராட வேண்டும், அவரது அனைத்து சக்திகளையும் இதற்காக செலவழிக்க வேண்டும். ஆனால் யாருக்காக இதையெல்லாம் சாதிக்கப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்தது? இதனால் தான் அரசியலில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தார் என தெரிவித்துள்ளனர்.