மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டு வாசலில் பூஜை செய்த சசிகலா...!

V. K. Sasikala Viral Video
By Nandhini Sep 01, 2022 04:23 AM GMT
Report

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டு வாசலில் பூஜை செய்த சசிகலா வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

விநாயகர் சதூர்த்தி திருவிழா

நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக விநாயகர் சதூர்த்தி திருவிழா கொண்டாடப்பட்டது.

சமீபகாலமாக கடைகளில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி விநாயகர் சிலைகளின் விற்பனை சூடுபிடித்தது. ஒரு அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

பலவிதமான வண்ணங்களில், பல வடிவங்களில் செய்யப்பட்டுள்ள வித, விதமான விநாயகர் சிலைகள் காண்பவரை கவர்ந்தது. நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகளில் சுண்டல், பொங்கல், கொழுக்கட்டை, பலகாரங்கள் செய்து விநாயகருக்கு படைத்து மக்கள் வழிபாடு நடத்தினர். பலர் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று இன்ஸ்டா, டுவிட்டரில், பேஸ் புக் போன்ற சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

sasikala

பூஜை செய்த சசிகலா

நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டு வாசலில் உள்ள ஜெய கணபதி விநாயகரை சசிகலாவும், இளவரசியும் வழிபாடு நடத்தினர். 

இதனையடுத்து, தன் வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்தார் சசிகலா. இது குறித்த வீடியோவை சசிகலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சசிகலா இல்லத்தில் உள்ள பூஜை செய்த அறையில் சாமி படங்களோடு, ஜெயலலிதாமும் உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.