சசிகலா தாய் அல்ல பேய் .. ஆவேசமான முன்னாள் அமைச்சர் !
ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா தாய் அல்லஅவர் ஒரு பேய் என முன்னாள் அமைச்சர் விசுவநாதன் கூறினார்.
திண்டுக்கல்லில் அதிமுக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் சசிகலாவிடம் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. அவரிடம் யாரும் பேசக்கூடாது. அதிமுக வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், பங்கேற்றார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஸ்வநாதன் .
சசிகலா கட்சியின் உறுப்பினரே கிடையாது. அவர் செயல்பாடு வேடிக்கையாக உள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை இரட்டை குழல் துப்பாக்கி போல் இ.பி.எஸ், ஒ.பி.எஸ் உள்ளனர்.
மேலும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வி கெளரவமான தோல்வி. இன்னும் சொல்லப்போனால் வெற்றிகரமான தோல்வி என கூறினார்.