குழப்பத்தில் அதிமுக .. புரட்சிப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா

ADMK V. K. Sasikala Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jun 24, 2022 06:27 AM GMT
Report

சசிகலா வருகிற 26ஆம் தேதி முதல் புரட்சிப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், "தமிழ் மண்ணின் உரிமைகளை காத்திடவும், பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணி காத்திடும் வகையிலும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புரட்சிப்பயணத்தை தொடங்குகிறார்.

சசிகலாவின் புரட்சி பயணம்

சத்துணவு கண்ட சரித்திர நாயகனின் பெருமைகளையும், தாலிக்கு தங்கம் தந்த தவப்புதல்வியின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பயணமாக மேற்கொள்ளவிருக்கிறார்.புரட்சிப்பயணத்தை வருகின்ற 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.30 மணிக்கு, தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் ரோடு வழியாக திருத்தணி பைபாஸ் சென்றடைகிறார்.

பின்னர் திருத்தணி பைபாஸிலிருந்து தனது புரட்சிப்பயணத்தை தொடங்கும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் திருத்தணி, குண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார். அச்சமயம் குண்டலூரில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

குழப்பத்தில் அதிமுக ..  புரட்சிப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா | Sasikala Is Coming To The Revolution

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், K.G.கண்டிகை, S.V.G.புரம், கிருஷ்ணாகுட்பம், R.K.பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார். அச்சமயம் R.K.பேட்டையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

குழப்பத்தில் அதிமுக ..  புரட்சிப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா | Sasikala Is Coming To The Revolution

அதன்பிறகு, அம்மையார்குப்பம் சென்று அங்குள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்தித்த பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறார்.

கழகத்தொண்டர்களுடன் சந்திப்பு

குழப்பத்தில் அதிமுக ..  புரட்சிப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா | Sasikala Is Coming To The Revolution

புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மேற்கொள்ளும் இந்த புரட்சிப்பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், புரட்சித்தலை தங்களது முன் மாதிரியாக ஏற்றுக்கொண்டு தன் நெஞ்சத்தில் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து தாய்மார்கள், இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.    

எடப்பாடியை முதல்வராக்கியது ஏன்? முதல் முறையாக விளக்கம் கொடுத்த சசிகலா! வெளியான ஆடியோ