முதலில் ஆடியோ.. இப்போது அறிக்கைகள்… அதிமுகவைகுறிவைக்கும் சசிகலா
சசிகலா. அண்மையில் வெளியிட்ட ஆடியோக்கள் பரபரப்பான நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்டசெயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், அதிமுகவை மீட்டு சசிகலாவின் ஒற்றைத்தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில எம்.ஜி.ஆர். கழக துணைச் செயலாளர் சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் இருக்குவரை அதிமுக அழிவை சந்திக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
சசிகலா ஏற்கனவே சசிகலா ஆடியோவால் அதிமுகவிற்குள் சலசலப்பு ஏற்பட்டபோது, அதிமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார் சசிகலா. அவரது எண்ணம் நிறைவேறாது என்றார் முனுசாமி.
இப்போது இந்த அறிக்கைகளால் அதிமுகவில் மேலும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.