சசிகலாவின் உறவினர் இளவரசி விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உடன் நான்கு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த இளவரசி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதற்கு இடையில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்பு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சசிகலாவை தொடர்ந்து அவரது உறவினர் இளவரசிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.கொரோனா தொற்றுக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி அண்மையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று இளவரசி 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையாகியுள்ளார்.பெங்களூருவில் சசிகலா தங்கியுள்ள இடத்திற்கு செல்ல உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.