சசிகலா தற்போது சுயநினைவுடன் தான் உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம்
சசிகலா தற்போது சுயநினைவுடன் தான் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார். சசிகலா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டு பெங்களூரு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மருத்துவரின் கண்காணிப்பில் உள்ள சசிகலாவுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. மற்றொரு பக்கம் சசிகலா உறவினர்கள் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி வந்தனர்.
இந்நிலையில் சசிகலா (66) உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலாவுக்கு ஆக்சிஜன் செறிவின் அளவுன் 98 சதவீதமாக இருப்பதுடன் அவர் சுயநினைவில் உள்ளார். நுரையீரல் தொற்று இருப்பதால் அவருக்கு மூச்சிறைப்பு இருக்கிறது.
அதனால் மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து 14 நட்கள் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.