சசிகலா சிகிச்சையில் நிலவி வரும் மர்மங்கள்..வெளியான அதிர்ச்சி தகவல்கள்
சசிகலா அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் மர்மங்கள் நிலவி வருவதாக புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் டி. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் ஆகப் பெரும் அரசியல் ஆளுமையாக விளங்கும் சசிகலா அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெளிப்படை தன்மை வேண்டும் என தமிழ்நாடு பார்வர்டு பிளாக் சார்பாக வலியுறுத்திகிறேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 12 மணி நேரமாகியும் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை என வரும் தகவல் அதிர்ச்சியையும் வியப்பையும் அளிக்கிறது. மேலும் சசிகலா விடுதலைக்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில் அவரது உடல் நிலையில் கவனம் செலுத்தாது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும் இது குறித்து அவரது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞரிடம் தெரிவிக்காதது ஏன் எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. தற்போது அவரது உடல்நலம் சீராகி தமிழக அரசியலுக்கு வருகை தர வேண்டும் என மக்கள் ஆவலாக உள்ளதால் அவரது உடல் நலம் குறித்து அவ்வபோது அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.