சசிகலாவுக்கு ஐசியூவில் சிகிச்சை தொடர்கிறது: மருத்துவமனை தகவல்

admk dmk bjp ntk
By Jon Jan 25, 2021 03:30 PM GMT
Report

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா நான்கு சிறை தண்டனைக்கு பிறகு வரும் 27-ஆம் திகதி விடுதலையாகவிருந்தார்.

ஆனால், அவர் உடல்நிலை சரியில்லாமல் போனதும், கொரோனா உறுதி செய்யப்பட்டதன் கராணமாகவும் அவர் விடுதலை இப்போது தள்ளிப் போயுள்ளது. விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ஐ.சி.யு வார்டில் கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதில் அவர் வேகமாக குணமாகி வருகிறார். நேற்று மாலையில் எடுக்கப்பட்ட பரிசோதனை அறிக்கையில், அவருக்கு ஆக்ஸிஜன் அளவு 98 சதவீதமாக உள்ளது. 3 லிற்றர் ஆக்ஸிஜன் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாசத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நாடி துடிப்பு நிமிடத்திற்கு 84 முறை துடிக்கிறது. பி.பி கட்டுபாட்டிற்குள் வந்துள்ளது. சர்க்கரையின் அளவு 198 உள்ளது. இருப்பினும் இன்சூலின் ஊசி செலுத்துவது தொடர்ந்து வருகிறது. அவராகவே எழுந்து நிற்கவும், அமரவும் முடிகிறது. இரும்பு ஸ்டிக் கொடுக்கும்போது, அதை பிடித்து நடமாடுகிறார்.

எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை எடுத்து கொள்கிறார். கொரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் வருவதால், புரோட்டோகால் விதிமுறைப்படி கோவிட் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐ.சி.யூவில் தான் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.