சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது
சசிகலா அவர்களுக்கு தற்போது ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார். சசிகலா உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றமடைந்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, சுவாச முறை அனைத்தும் தற்போது சீராக உள்ளது தெரிவித்திருந்தனர்.
சர்க்கரை அளவில் அவ்வப்போது மாற்றம் ஏற்படுவதால் இன்சுலின் அவருக்கு வழங்கப்படுவதாக மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.
இந்த நிலையில் சசிகலாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.