கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சசிகலாவிடம் இரண்டாவது நாளாக விசாரணை

V. K. Sasikala Kodanad Case
By Irumporai Apr 22, 2022 04:48 AM GMT
Report

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் 2வது நாளாக இன்று விசாரணை தொடங்கியது 

கோடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, தனிப்படை போலீசார் இதுவரை 250-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, சசிகலாவின் உறவினரான விவேக் மற்றும் கோடநாடு பங்களா மேலாளார் நடராஜன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தியிருந்தனர்.

கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், பங்களா உரிமையாளரிடம் விசாரணை நடத்த அனுமதிக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  

இந்த நிலையில், கோடநாடு பங்களாவின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டனர். அதன்படி, சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் வீட்டுக்கு, காலை 11 மணிக்கு சென்ற தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணையை நடத்தினர்.

2017 கொலை, கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு பங்களாவை நேரில் சென்று பார்த்தீர்களா என்பன உள்ளிட்ட 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முதல் நாளில் ஐந்து மணி நேரம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தனிப்படை போலீசார், சசிகலாவிடம் விசாரணையினை தொடங்கியுள்ளனர்.