5ம் தேதிக்கு பின் அரசியலில் களமிறங்குகிறாரா சசிகலா.? வெளியான ஆடியோவால் பதற்றம்

politics Sasikala july5
By Irumporai Jul 02, 2021 09:39 AM GMT
Report

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று விட்டு உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன் என சசிகலா பேசும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில்  சிறை  தண்டனை அனுபவித்துவிட்டு சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா அரசியலில் தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்  தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார்.

இது கட்சிதொண்டர்களிடமும் அவரது விசுவாசிகளுக்கும் அதிர்ச்சியினை கொடுத்தது.

கொஞ்ச நாட்கள் அரசியலை விட்டு விலகியிருந்த சசிகலா ஆன்மிக பயணம் என வாழ்வை கழித்து வந்த நிலையில்சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி எதிர்க்கட்சியானதும் ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவுக்கு அதிர்ச்சியலைகளை கொடுத்து வருகிறார்.

அவரோடு பேசியவர்களை கட்சியிலிருந்து அதிமுக நீக்கினாலும் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜுடன் வி. கே.சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில் 5 ஆம் தேதி வரை ஊடரங்கு சொல்லியுள்ளனர். அதற்கு பின் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று விட்டு உங்கள் அனைவரையும் சந்திக்க வருகிறேன்என்று கூறியுள்ளார்.

இந்த ஆடியோவின் மூலம் சசிகலா அரசியல் பிரவேசம் மிக விரைவில் வரும் என அடித்து கூறுகின்றனர் அவரது விசுவாசிகள் .

மீண்டும் அரசியலில் ரீ எண்ட்ரி கொடுப்பாரா சசிகலா  அதிமுக அவர் வசம் செல்லுமா ? இதற்கான பதில் இனி வரும் காலங்களில் தான் தெரிய வரும்.