சசிகலாவின் கனவு ஒருபோதும் நனவாகாது: சி.வி.சண்முகம் ஆவேசம்!
அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று தொலைபேசியில் பேசி நாடகமாடி வரும் சசிகலாவின் கனவு ஒருபோதும் நனவாகாது எனமுன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முக்கிய தொண்டர்கள் பங்கேற்றனர் இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் :
அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவுடன் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆடிய கையும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதைப் போல மீண்டும் அதிமுகவைக் கைப்பற்றி கொள்ளை அடிக்கலாம் என, சசிகலா திட்டம் போடுகிறார்.
எப்படியாவது அதிமுகவைக் கைப்பற்றி விடவேண்டும் என்று சசிகலா கனவு காண்கிறார். அவரது கனவு ஒருபோதும் நனவாகாது. சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையால்தான் வீண் பழியை ஏற்றுக்கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குச் சென்றார்.
நமக்கு எதிரி திமுக மட்டுமல்ல, இந்த இயக்கத்திற்கு துரோகம் விளைவிக்க நினைக்கும் துரோகிகளை இனம் கண்டுகொண்டு இயக்கத்தை ஜாக்கிரதையாக நடத்த வேண்டும். சசிகலா குடும்பத்தை நாம் எந்தக் காலத்திலும் நெருங்கவிடக் கூடாது. என பேசினார்.