மருத்துவர்கள் சசிகலாவுக்கு அளித்த ஆலோசனைகள்
மருத்துவமனையில் இருந்து சசிகலா அவர்கள் மருத்துவர்களின் சில ஆலோசனைகள் படி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சசிகலா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நல குறைவு ஏற்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே சசிகலா அவர்கள் நான்காண்டு சிறைத்தண்டனை முடிந்து கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலையானார். இருந்தபோதும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில் பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கூறும் போது சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழு அவரை டிஸ்சார்ஜ் செய்யாலாம் என்ற ஒரு முடிவை எடுத்துள்ளது, மேலும் அவர் வீட்டு தனிமைப்படுத்தலின் ஆலோசனையுடன் நாளை வெளியேற்றப்படுவார்:
சசிகலா நடராஜனுக்கு கொரோனா அறிகுறி இல்லாதவர். இரத்த, சர்க்கரைகள் அளவுகள் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர் ஆக்ஸிஜன் இல்லாமல் சுவாசிக்கிறார் . அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என கூறி உள்ளது.